குரு எனக்கு பிரசாரம் செய்ய வேண்டாம்… அன்புமணியின் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸை ஒருவழியாக சமாதானம் செய்து பிரசாரத்திற்கு அழைத்து வந்து விட்டார் அவரது மகன் அன்புமணி.

அதே சமயம் வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு தனக்கு பிரசாரம் செய்யத் தேவையில்லை என்று கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குரு வந்து ஓட்டு கேட்டால் பிற சமூகத்தினரின் வாக்குகள் தனக்கு கிடைக்காமல் போய்விடும் என்ற பயம்தானாம் இதற்குக் காரணம்.

தாஜா செய்த ஜி.கே.மணி

தாஜா செய்த ஜி.கே.மணி

கோபத்தில் இருந்த ராமதாஸை அன்புமணியும், ஜி.கே.மணியும்தான் சமாதானம் செய்து பிரசாரத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

அடம் பிடித்த குரு

அடம் பிடித்த குரு

அதே நேரத்தில் பிரசாரத்திற்கு போகமாட்டேன் என்று குரு அடம்பிடித்துள்ளார். சிதம்பரத்தில் தான் அழைத்து வந்த வேட்பாளருக்கு மட்டுமே பிரசாரம் செய்வேன் என்று கூறிவிட்டார்.

குரு எனக்கு வேண்டாம்

குரு எனக்கு வேண்டாம்

இதைக் கேள்விப்பட்ட அன்புமணி, குரு எனக்கு பிரசாரத்திற்கு வரவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். குரு வந்து ஓட்டு கேட்டால் பிற ஜாதிக்காரர்களின் ஓட்டுக்களும் விழாமல் போக வாய்ப்புள்ளது என்று கூறி குருவை தடுத்துவிட்டாராம்.

சாதனையை சொல்லுவோம்

சாதனையை சொல்லுவோம்

நான், ஏ.கே.மூர்த்தி, வேலு ஆகியோரும் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறோம். எங்களின் சாதனையை சொல்லி ஓட்டு கேட்போம் என்றும் கூறிவிட்டாராம் அன்புமணி.

அப்செட் ஆன அன்புமணி

அப்செட் ஆன அன்புமணி

காங்கிரஸ் கட்சியில் இருந்து பாமகவிற்கு வந்த மணிரத்னம், 5 நிமிடத்தில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு காரணம் குருதான் என்பதால் இதுவும் அன்புமணியை அப்செட் ஆக்கியதாம். எனவேதான் குருவை மொத்தமாக ஒதுக்க ஆரம்பித்துவிட்டார் அன்புமணி

தேமுதிக மேடையேறும் ராமதாஸ்

தேமுதிக மேடையேறும் ராமதாஸ்

மகனுக்கும், மணிக்கும் மட்டுமே பிரசாரம் செய்வேன் என்று கிளம்பியுள்ள ராமதாஸ் கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறி பிற பாமக வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. அதேபோல ராமதாஸ் தேமுதிக மேடை ஏறினாலும் ஆச்சரியமில்லை என்று தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+