(இப்போது) நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்கிறார் ப. சிதம்பரம்

இது குறித்து அவர் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில்,
தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் திமுக மற்றும் அதிமுகவால் டெல்லியில் எதையும் சாதிக்க முடியாது. திமுகவும் சரி, அதிமுகவும் சரி இரண்டுமே சண்டைக்கோழிகள். அவர்களின் சண்டை தமிழகத்திற்குள்ளேயே இருப்பது தான் நாட்டிற்கு நல்லது.
130 ஆண்டுகள், 8 தலைமுறை பழமை வாய்ந்தது காங்கிரஸ் கட்சி. கட்சிக்கு குறைகளும், நிறைகளும் உள்ளன. நாங்கள் பல நல்ல திட்டங்களையும் கொண்டு வந்துள்ளோம். சில தவறுகளையும் செய்துள்ளோம். எங்கள் தவறுக்கான தண்டனையை மக்கள் கொடுத்துவிட்டீர்கள். அடித்தாலும், அணைத்தாலும் நாங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை.
நடப்பது பஞ்சாயத்து தேர்தல் இல்லை. லோக்சபா தேர்தல். இது அதிமுக, திமுக இடையேயான போட்டி இல்லை. திமுக பாஜக, காங்கிரஸ் மற்றும் மூன்றாவது அணி என்று யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. அப்படி இருக்கையில் டெல்லி ஆட்சியில் எப்படி பங்கேற்க முடியும்?. அவர்கள் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து செயல்படுகிறார்கள்.
ஜெயலலிதாவோ தனது பிரச்சாரத்தின் முதல் 10 நாட்கள் நான் தான் பிரதமர் என்றார். அதன் பிறகோ நாங்கள் மத்திய ஆட்சியில் பங்கேற்போம் என்று கூறி வருகிறார். காங்கிரஸை சாடும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா?
ஏற்கனவே பாஜகவுக்கு ஓராண்டு ஆதரவு கொடுத்துவிட்டு பாடாய் படுத்தியது மறந்துவிட்டதா?. டெல்லியில் அதிமுக ஆட்சி கிடையாது. அதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் போட்டி. பாஜக ஆட்சியை பிடித்தால் தலித், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களின் ஆதரவு இருக்குமா? அவர்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் தான் தொடருமா?. இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் காங்கிரஸ் ஆட்சி தொடர வேண்டும் என்றார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications