எல்லா நிறுவனங்களும் பாலில் கலப்படம் செய்யுதுன்னு சொல்லலை... ராஜேந்திர பாலாஜி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லா நிறுவன பால்களிலும் கலப்பட்டம் என்று நான் கூறவில்லை என அந்தர்பல்டி அடித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, .

சென்னையில் அண்ணாநகர், அண்ணாநகர் மேற்கு, விருகம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட 7 இடங்களுக்கு இல்லம் தேடி வரும் ஆவின் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

 i never said all milk companies doing adulteration said minister Rajendra Balaji

அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,''ஆவின் பால் பொருட்களில் எந்த கலப்படமும் இல்லை. ஆவின் தயிர் மிகவும் சுத்தமானது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை சென்னை முழுவதும் இல்லம் தேடி வரும் ஆவின் திட்டம் மூலம் கொண்டு சேர்ப்போம். தற்போது ஆவின் ரசகுல்லாவை இல்லம் தேடி வரும் ஆவின் திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம்'' என்றார்.

மேலும்,''நான் எல்லா பால் நிறுவனங்களும் கலப்படம் செய்கிறது என்று கூறவில்லை. ஆனால், கலப்படம் செய்யும் நிறுவனங்களுக்கு நிச்சசயம் தண்டனை உண்டு'' என கூறினார்.

பாலில் கலப்படம் என்று முதன்முதலில் சர்ச்சையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிளப்பும்போது, தனியார் நிறுவன பாலில் கலப்படம் என பொத்தாம் பொதுவாகத்தான் கூறினார். எந்த நிறுவனத்தையும் தனிப்பட்ட முறையில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Avin products door delivery extended to 7 new places in chennai and minister Rajendra Balaji told that i never said all milk companies doing adulteration.
Please Wait while comments are loading...