தமிழகம் உள்பட 3 மாநிலங்களில்... பான் மசாலா, குட்கா தயாரிப்பாளர் வீடுகளில் அதிரடி "ஐடி" ரெய்டு!
சென்னை: தமிழகம் உள்பட மூன்று மாநிலங்களில் பான் மசாலா, குட்கா தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விற்பனையாளர்கள், தரகர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம், ஆந்திரா தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் 30 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள குடோனில் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
சுமார் ரூ. 100 கோடிவரை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா என ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் கோதனை நடத்தப்பட்டது. அப்போது பல கடைகளில் சட்ட விரோதமாக பான்மசாலா, குட்கா ஆகியவை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
ரூ.65 லட்சம் பறிமுதல்
செங்குன்றம் பகுதிகளில் பான் மசாலா குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.65 லட்சம் பணத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா, ஆந்திரா குடோன்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications