அரசியலுக்கு வரமாட்டேன்... தகுதியானவர்களுக்கு ஓட்டு போடுங்கள்: சகாயம்
நாமக்கல்: அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. எனது பயணம் சமுதாயத்தை நோக்கியே உள்ளது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டியவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்று பல கட்டமாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளார்.

நேர்மையான அதிகாரியான சகாயம் அரசியலில் ஈடுபடவேண்டும் என்றும், தமிழக முதல்வராகவேண்டும் என்றும் கடந்த 6 மாதங்களாகவே கோரிக்கையும், எண்ணமும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டது.
இதை வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு பேரணி நடைபெற்றது. மதுரையில் ஜனவரி மாதம் பிரம்மாண்டமான மாநாடு நடைபெற்றது. ஆனால் சகாயம் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறிவருகிறார்.
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்த நேரத்தில் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், எனது பயணம் சமுதாயத்தை நோக்கியே உள்ளது. தேர்தலில் நேர்மையான, தகுதியானவர்களை தேர்வு செய்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார். ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ, பரிசு பொருட்கள் கொடுத்தாலோ யாரும் வாங்கக்கூடாது என்றும் சகாயம் கேட்டுக்கொண்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications