தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: செய்தித் துறை செயலராக உதயச்சந்திரன் நியமனம்
சென்னை: தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன முதன்மை இயக்குநராக கே.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளராக இருந்து வந்தார்.

மாநில ஊரக கிராமப்புற சுகாதார குழுவின் திட்ட இயக்குநராக, பெரம்பலூர் மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் தாரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்
தொழிற்சாலை ஆணையர், தொழில் வர்த்தக துறை இயக்குநராக அம்புஜ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை மத்திய அரசுப் பணியில், கனரகத் தொழிற்சாலைத் துறையின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
நிதித்துறை (செலவீனங்கள்) செயலாளர் உதயச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரிய செயல் இயக்குநராக இருந்து வந்தார்.
நகராட்சி நிர்வாக இணை ஆணையர் ஆசியா மரியம், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (கல்வி) செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications