பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்... இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!
பிரதமர் நரேந்திர மோடிக்க எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 12ம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகின.

சென்னையை அடுத்து மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளார். ஒரு நாள் பயணமாக 12-ந் தேதி அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமரின் சென்னை வருகையின் போது அவருக்கு கருப்புக்கொடி காட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி டிவிட்டரில் கூறியுள்ளதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இறைவன் நாடினால் எதிர்வரும் 12 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் தரை மார்க்கமாக அடையாறு செல்லும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெறும்.#IndiaBetraysTamilnadu
— Mohamed Shibli (@ShibliOfficial) April 9, 2018
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி எதிர்வரும் 12ம் தேதி காலை 11:30 மணிக்கு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் தரை மார்க்கமாக அடையாறு செல்லும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications