ம.ந. கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு: தடா. அப்துல் ரஹீம்
சென்னை: சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் தடா. அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியும் தேமுதிகவும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருவதாக இதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறி வருகிறார்.

அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் ஆதரவையும் மக்கள் நலக் கூட்டணி கோரியிருந்தது. ஆனால் தமிழகத்தில் எந்த கட்சியையும் ஆதரிக்க முடியாது என ஆம் ஆத்மி அறிவித்துவிட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா அப்துல் ரஹீம், வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

பின்னர் மதிமுக பொதுச்செயலர் வைகோ, இடதுசாரித் தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை தடா அப்துல் ரஹீம் நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications