சிலைகடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனின் பேரன் தூக்குப் போட்டு தற்கொலை!
சிலைகடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனின் பேரன் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
சென்னை: சிலைகடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனின் பேரன் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி நகரில் உள்ள வீட்டில் ஸ்ரீகாந்த் ஓம்கார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிலை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் ஸ்ரீகாந்த் தற்கொலை செய்துள்ளார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த தீனதயாளின் வீட்டு குடோனில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தலைமறைவான தீனதயாளன் கைது செய்யப்பட்டார்.

தீனதயாளின் பேரன் ஸ்ரீகாத் ஓம்கார், சாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்தவர். இவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளி வந்த அவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று ஸ்ரீகாந்த் ஓம்கார் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications