ஆர்கே நகரில் அதிமுக தோற்றால் அந்த தோல்வி பாஜகவுக்குதான்! மறைமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த மரண அடி!
ஆர்கே நகரில் அதிமுக தோற்றால் அந்த தோல்வி தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சிபுரியும் பாஜகவுக்கும்தான்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தால் அது பாஜகவின் தோல்வி தான். தமிழகத்தில் பாஜக நடத்தி வரும் மறைமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த மரண அடி.
ஆர்கே நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை ராணிமேரி கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் திரண்டுள்ளனர்.
முதல் இரண்டு சுற்றுகளிலும் சுயேச்சையாக போட்டியிட்ட சசிகலாவின் அக்காள் மகன் தினகரனே முன்னிலையில் உள்ளார். ஆளும் அதிமுக தினகரனை விட 3 மடங்கு வாக்குகள் குறைவாக பெற்று 2வது இடத்தில் உள்ளது.

அதள பாதாளத்தில் பாஜக
மத்தியில் ஆளும் பாஜகவும் ஆர்கே நகரில் போட்டியிட்டது. ஆனால் நோட்டா பெற்ற வாக்குகளை கூட நெருங்க முடியாமல் அதள பாதாளத்தில் கிடக்கிறது.

அதிமுகவுக்கு பின்னடைவு
இரட்டை இலைச்சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் வெற்றி நமக்கே என்றிருந்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பின் வேட்பாளர் மதுசூதனன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இரண்டு சுற்று வாக்கு எண்ணிகையில் அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது.

தொடர்ந்து முன்னிலை
வாக்கு எண்ணிக்கு 19 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. இதில் முதல் 2 சுற்றுகளிலும் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அதிமுக தோல்வி?
இதே நிலை நீடித்தால் நிச்சயம் தினகரன்தான் வெற்றிப்பெறுவார். அதிமுகவுக்கு படுதோல்வியை சந்திக்கும்.

பாஜக மறைமுக ஆட்சி
அதிமுக தோல்வியை சந்தித்ததால் அந்த தோல்வி பாஜகவுக்கும் தான். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசு முழுக்க முழுக்க மத்தியில் ஆளும் பாஜகவின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மறைமுக ஆட்சிக்கு மரணஅடி
மேலும் அதிமுக தோல்வியடைந்தால் அது தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சிபுரியும் பாஜகவை மக்கள் ஏற்கவில்லை என்பதாகவே இருக்கும். மேலும் பாஜகவின் மறைமுக ஆட்சிக்கு கிடைத்த மரண அடியாகவும் அதிமுகவின் தோல்வி கருதப்படும்.












Click it and Unblock the Notifications