இப்ப மட்டுமல்ல ஏப்ரலிலும் கூட மக்களின் ஆதரவு தினகரனுக்குத் தானாம்... ராஜநாயகம் சர்வே கணிப்பு!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் மாத்தில் நடந்திருந்தால் யார் வெற்றி பெற்றிருப்பார்கள் என்ற ஆய்விலும் டிடிவி. தினகரனே முன்னிலை வகிப்பதாக மக்கள் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Recommended Video

சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடந்திருந்தால் டிடிவி. தினகரனே வெற்றி பெற்றிருப்பார் என்று அப்போதைய கருத்துக்கணிப்பின் முடிவையும் பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு வெளியிட்டுள்ள முடிவுகளில் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் ஆய்வு சார்பில் பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் குழுவினர் இணைந்து ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் குறித்து கள ஆய்வு மேற்கொடுள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிகறு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலிலும், தற்போது நடைபெறும் தேர்தலுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதிமுக இரண்டாக உடைந்து தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் செயல்பட்டனர். தற்போது நடைபெறும் தேர்தலில் அதிமுக ஒன்றுபட்ட நிலையில் தினகரன் கழட்டி விடப்பட்டுள்ளார். கட்சியின் பெயர், சின்னம் என அனைத்தும் தினகரன் கையில் இல்லாத நிலையில் தற்போது தேர்தலை சந்திக்கிறார்.

டிடிவிக்கே ஆதரவு
இத்தகைய சூழலில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்திருந்தால் பெரும்பான்மையான ஆதரவு டிடிவி. தினகரனுக்கே சென்றிருக்கும் என்று தெரிகிறது. ஏப்ரலில் யாருக்கு வாக்களித்திருப்பீர்கள் என்று யூகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிடிவி தினகரனுக்கே முன்னிலை இடம் கிடைத்திருக்கிறது.

அப்போதும் மதுசூதனனுக்கு 3வது இடம் தான்
அதாவது 38.2 சதவீத வாக்குகள் பெற்று தினகரன் முதல் இடத்திலும், 27 சதவீத வாக்குகளுடன் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில் அப்போது போட்டியிட்ட மதுசூதனனுக்கு 18.3 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யார் வெற்றி பெற்றிருப்பார்கள் என யூகம்
இதே போன்று ஏப்ரலில் யார் வெற்றி பெற்றிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு டிடிவி. தினகரன் வெற்றி பெற்றிருப்பார் என்று 43.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மருதுகணேஷ் வெற்றி பெற்றிருப்பார் என்று 25.6 சதவீதம் பேரும், மதுசூதனன் வெற்றி பெற்றிருப்பார் என்று 19 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

திமுகவிற்கு 2வது இடம்
ஏப்ரல் இடைத்தேர்தலின் போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இன்று வாள்ளதிப்பதாக இருந்தால் யாருக்கு ஆதரவாக வாக்களித்திருப்பீர்கள் என்று நடத்தப்பட்ட ஆய்விலும் டிடிவி. தினகரனுக்கே மக்களின் ஆதரவு இருந்துள்ளது. 35.4சதவீதம் பேர் டிடிவி. தினரகனுக்கு வாக்களித்திருப்போம் என்றும், 25.9 சதவீதம் பேர் மருதுகணேஷிற்கும், 20.6 சதவீதம் பேர் மதுசூதனனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications