எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை.. விஷால் அதிரடி!
எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.
ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் முதல்முறையாக அரசியல் களம் காண்கிறார் விஷால். ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்த விஷால் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அடிப்படை வசதிகள் தேவை
அப்போது சட்டத்தை மீறி தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவர் தெரிவத்தார். மக்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை என்பதே எங்கள் கொள்கை என்றும் அவர் கூறினார்.

எல்லாமே சரியாக நடந்திருந்தால்
எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார். மேலும் மக்களின் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் வாக்கு கேட்கவுள்ளேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மக்களில் ஒருவனாக போட்டி
திரைத்துறையினர் யாரும் எங்களை எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் மக்களில் ஒருவனாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் நடிகர் விஷால் கூறினார்.

சொன்னதை செய்து உள்ளோம்
தயாரிப்பாளர் சங்கத்தில் நாங்கள் சொன்னதை செய்து உள்ளோம் என்றும் விஷால் கூறினார். மேலும் ஆளும் கட்சி மீது தான் புகார் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் மக்களே குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்றும் விஷால் தெரிவித்தார்.

நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது
அசோக்குமார் தற்கொலை குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் நடிகர் விஷால் கூறினார். இதனிடையே விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினா செய்யக்கோரி இயக்குநர் சேரன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications