வாய்க்கொழுப்போடு கம்யூனிஸ்டுகளை பற்றி பேசுவதை சீமான் நிறுத்தாவிட்டால்.. சிபிஎம் கடும் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பலாத்கார விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஒரு பாலியல் குற்றவாளி.. ரேப் அக்யூஸ்டு என இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்தனர். இதனையடுத்து இடதுசாரிகளை விமர்சித்த சீமானுக்கு சிபிஎம் கட்சித் தலைவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியிருப்பதாவது: சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக் கொண்டுள்ளார். இதற்கு அவரது ஏராளமான பேட்டிகளே சாட்சி. பிரச்சனைகளைப் பட்டியலிட்டு கம்யூனிஸ்டுகள் என்ன செய்தார்கள் என கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் சீமான். அவர் பட்டியலிட்ட அத்தனை பிரச்சனைகளிலும் சிபிஎம், அதன் அமைப்புகள் களத்தில் நின்று போராடி அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன என நெஞ்சை நிமிர்த்தி சொல்லவும் முடியும்.

சீமான் வாயால் வடை சுடுகிற வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தாரே தவிர களப் போராட்டத்துக்கு என்றைக்கும் வந்ததே இல்லை. கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்களா? இல்லையா? என்ற சான்றுகளை சீமான் போன்றவர்கள் வழங்க வேண்டியது இல்லை.

கம்யூனிஸ்டுகள் என்றாலே போராடுகிறவர்கள் என்பது இந்தியா முழுவதும் இருக்கிற மக்களுக்கு தெரியும். பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று பதற்றமடைவதைப் போல்தான் சீமானினுடைய கம்யூனிஸ்டுகள் என்ன செய்திருக்கிறார்கள் என்ற கேள்வி.

ஜி.செல்வா, சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்: பெண்களை பொதுவெளியில் கண்ணியமற்ற வகையில் பேசித்திரிகிறார் சீமான். நீயே ஒரு பாலியல் குற்றவாளி.. ரேப் அக்யூஸ்ட்.. நீ யார்டா இப்படி பேசிகிட்டு திரியற? இந்த ரேப் அக்யூஸ்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதில் என்ன தவறு? நீ எவ்வளவு தைரியமாக வந்து கம்யூனிஸ்டுகளை பற்றி எல்லாம் கேள்வி கேட்கிற? அரசியல் பேசுவதாக கூறிக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் கண்ணியமற்ற போக்கை விதைத்துக் கொண்டிருக்கிறார் சீமான். நீ எத்தனை போராட்டம் நடத்தின? வேலை இல்லாத பட்டாதரிகளுக்காக சீமான் எத்தனை போராட்டம் நடத்தினார்? உழவர் குடி பெருமக்களுக்காக சீமான் எத்தனை போராட்டத்தை முன்னெடுத்தார்? போராட்டம் நடத்திய போது உங்களை வாழ்த்திப் பேசத்தான் கூப்பிட்டார்கள்.. அப்படி வாழ்த்திப் பேசின உனக்கே இப்படி வாய்க்கொழுப்பு இருந்தா, அந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டதே நாங்கதான்யா..

வாய்க்கொழுப்புடன் சீமான் அவர்கள் பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகள் குறித்து சீமான் பேசுவதற்கு அருகதையே கிடையாது.சீமான் என்பவர் மல்டி நேஷனல் கம்பெனிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு திரிகிற ஆள்.. ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் அடியாள் நீ.. நீ யாருய்யா கம்யூனிஸ்டுகளைப் பற்றி கேள்விகளை கேட்கிற? சிபிஎம் தலைவர்களை பற்றி இனியும் தவறாகப் பேசினால் சீமான் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+