கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட ஆட்சியை அசைக்க முடியாது: ஸ்டாலினுக்கு எடப்பாடியார் பதில்
கோவை: கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தொண்டாமுத்தூரில் 70 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் பேசினார். அப்போது சொடக்கு போட்டால் அதிமுக ஆட்சியை கவிழும் என்று ஈரோடு மாநாட்டில் ஸ்டாலின் பேசியதற்கு அவர் பதிலடி கொடுத்தார்.

கடப்பாரையை போட்டு நெம்பினால்
கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட அதிமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என அவர் கூறினார். மேலும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற திமுகவின் கனவு நிறைவேறாது என்றார்.

இதுவே சான்று
ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக மத சார்பற்ற அரசு என்பதற்கு இந்த திருமண நிகழ்ச்சியே சான்று என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

துரும்பை கூட கிள்ளிபோடவில்லை
14 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக காவிரி மேலண்மை வாரியத்துக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

அதிகாரம் ஒன்றே குறிக்கோள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். திமுகவுக்கு அதிகாரம் ஒன்றே குறிக்கோள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications