ஒழுங்கா கொண்டு வந்து கொடுத்துருங்க.. இல்லை.. பொன் மாணிக்கவேல் அதிரடி வார்னிங்!
குற்றவாளிகள் தாமாக சிலைகளை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: "திருடவனங்க, கடத்தனவங்க எல்லாம் சிலைகளை ஒழுங்கா அவங்க அவங்களே கொண்டு வந்து கொடுத்துட்டா, நல்லது!! இல்லாட்டி ஜெயில்தான்!" என்று சிலைத் திருட்டுப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் வெகு சாதாரணமாக நடந்து கொண்டிருந்த சிலை கடத்தல் சமாச்சாரத்தை பொன் மாணிக்கவேல் தீவிரமாக கையாண்டு வருகிறார்.
[ கவனிச்சீங்களா மக்களே... வானில் வளைத்து வளைத்து கட்டப்படும் மணல்வீடுகள்.. மழையாகுமா? ]

திடீர் திடீர் ஆய்வுகள்
சிலை கடத்தல்காரர்களை கைது செய்தும் வருகிறார். மூலை முடுக்குகளில் சோதனைகள், விசாரணைகள், திடீர் திடீர் ஆய்வுகள் என தமிழகத்தையே ரவுண்டு கட்டி அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

விரிவடையும் விசாரணை
கடத்தலை ஒழித்து கட்ட நடத்தப்படும் ஆய்வுகளில் கோயிலாவது, அரண்மனையாவது? எல்லாமே ஒன்றுதான் இவருக்கு. தற்போது கிண்ட கிண்ட புதையல்போல சிலைகளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இந்த கடத்தல்களின் தொடர்புகள் இன்னும் நீளும் போல உள்ளது, விசாரணைகளும் விரிவடையும் போல தெரிகிறது. சாமிகளை கடத்தும் பிரபல ஆசாமிகளும் மாட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மாதம் டைம்
எனவேதான் ஒரு எச்சரிக்கையை பொன்.மாணிக்கவேல் சற்று காட்டமாகவே இன்று தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிலைகள் வாங்கியவர்கள் அவர்களாகவே முன்வந்து ஒப்படைத்தால் நல்லது. எந்த சட்ட சிக்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். வேண்டுமானால் ஒரு மாதம் டைம் தருகிறோம். ஒரு மாதத்திற்குள் சிலைகளை ஒப்படைத்துவிட்டால் அவர்களுக்கு தண்டனை இல்லை. ஒரு வருஷம் கழித்து ஒப்படைத்தாலோ, அல்லது மாட்டிக் கொண்டாலோ, ஜெயில்தான்" என்று சொல்லி இருக்கிறார்.

ஒப்படைப்பார்களா?
பொன்.மாணிக்கவேலின் இந்த அறிவிப்பினால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் முன்வந்து சிலைகளை ஒப்படைப்பார்களா? அல்லது தங்கள் தவறுகளை மனமுவந்து நேர்மையாக ஒப்புக் கொள்வார்களா? அல்லது வழக்கம்போல் பொன். மாணிக்கவேல் அதிரடியில் இறங்கிதான் குற்றவாளிகளை பிடிப்பாரா என்பதை இனிதான் பார்க்க வேண்டும்!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications