தென் சென்னையில் விறுவிறு வாக்குப்பதிவு: இல.கணேசன் வாக்களித்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளர் இல.கணேசன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற லோக்சபா தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இன்று காலை 7 முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

Ila.Ganesan casts vote in West Mambalam

பாஜக மூத்த தலைவரும் தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளருமான இல.கணேசன் மேற்கு மாம்பலம் சீதாராம் வித்யாலாயா பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இந்த பகுதியில் இறுதிக்கட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இல.கணேசன் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியும் மாற்றம் செய்யப்பட்டதால் தேர்தல் ஆணையத்தை அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த ஒருவார காலமாகவே வீடு வீடாக சென்று வாக்குசாவடியை தெரிவித்தும், கடைசி நேரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளரும் ஐ.ஜே.கே கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல பிரதமரை நாம் எதிர்பார்த்திருக்கிறோம். இந்தியாவில்மிகப்பெரிய மாற்றம் வரும் வளமான இந்தியா உருவாகும் என்பது உறுதி என்றார்.

மத்திய அமைச்சரும், புதுச்சேரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான நாராயணசாமி அங்குள்ள பொதுப்பணித்துறை வாக்குச் சாவடியில் ஓ்டடுப் போட்டார்

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா சிவகங்கையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+