நாமக்கல்லில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை - 200 கிலோ பறிமுதல்; ரூ. 5200 அபராதம்!
நாமக்கல்: நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு ரூபாய் 5,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் பொறியாளர் கமலநாதன், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அரசு அனுமதித்துள்ள 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறார்களா என சோதனை செய்தனர். இந்த சோதனையில் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பை, கேரி பேக் மற்றும் பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த ஆய்வு, மளிகை கடை, பேக்கரி, எசன்ஸ் கடை, வர்த்தக நிறுவனம் என 15 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது 200 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு, 5,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக அத்தொகை வசூல் செய்யப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications