சென்னையில் புறநகர் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்.. போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
சென்னை : புறநகர் ரயில் காலதாமதமாக வந்ததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட பயணிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
சென்னையின் புறநகர் பகுதி மக்கள் விரைவான போக்குவரத்துக்கு மின்சார ரயில் சேவையையே நம்பியுள்ளனர். நாள்தோறும், அலுவலகம் செல்வோர், வியாபாரம் செய்வோ என பல்லாயிரக்கணக்கானோர் புறநகர்களில் இருந்து சென்னைக்கு வந்து மாலை, இரவில் மீண்டும் புறநகர் திரும்புகின்றனர்.

இதனால் சென்னையில் இருந்து புறநகர் செல்லும் ஒவ்வொரு மின்சார ரயிலிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில் காலதாமதமாக வந்ததைக் கண்டித்து, பேசின் பிரிட்ஜ் பகுதியில், ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக செல்லும் மற்றும் சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பயணிகள் கலைந்து செல்லாததால் அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.
பயணிகள் கூட்டம் கலைந்த சற்று நேரத்தில் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications