போதையில் பெண் பயணியிடம் அத்து மீறிய சப் இன்ஸ்பெக்டர் !! வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு !!!
திண்டுக்கல் : பேருந்தில் குடி போதையில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண் பயணியிடம் அத்து மீறிய காட்சிகள் வாட்ஸ் அப் வீடியோவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து குமுளிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் சென்றபோது அம்மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றும் ஒருவர் ஏறினார்.

பேருந்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்த போதும் குடி போதையில் இருந்த அந்த சப் இன்ஸ்பெக்டர் பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையில் உட்கார்ந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேறு இடத்தில் சென்று அமரும்படி சப் இன்ஸ்பெக்டரிடம் கூறினார். ஆனால் புல் மப்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ‘நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா? உன் பக்கத்துல நான் உட்கார கூடாதா?' என கேட்டுள்ளார்.
உச்ச கட்டமாக போதை தலைக்கேற அந்த சப் இன்ஸ்பெக்டர் அந்த பெண் மடியில் படுக்கவே, அதிர்ச்சி அடைந்த பெண் பயணி எழுந்து சத்தம் போட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சக பயணிகள் அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பேருந்தில் இருந்து இறங்கி சென்று விட்டார்.
இந்த சம்பவம் முழுவதையும் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ்அப்பில் பலருக்கும் அனுப்பியுள்ளார்.
காவல் துறை உடையில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் பெண்ணிடம் அத்துமீறிய அந்த காட்சி தற்போது வாட்ஸ்அப் மூலம் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications