மதுரையில் ‘தெர்மாகோலுடன்‘ போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் அந்தந்த மாவட்ட பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை: ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் அந்தந்த மாவட்ட பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் கையில் தெர்மாககோலுடன் முழக்கமிட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட பணிமனைகளிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தங்கள் தொகுதி அமைச்சரான செல்லூர் ராஜூவை கண்டிக்கும் வகையில் அவர்கள் கைகளில் தெர்மாகோலை ஏந்தியப்படி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அண்மையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. ஆனால் அந்தத்திட்டம் தோல்வியடைந்ததால் செல்லூர் ராஜூ தெர்மாகோல் ராஜூ என மக்களால் அடையாளப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications