நாகையில் மற்றொரு அதிர்ச்சி.. தீயணைப்புத்துறை கட்டடம் தரைமட்டமானது
நாகை: தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் தங்கும் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக்கட்டடங்கள் இடிந்து விழுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. நேற்று நாகை அருகே பொறையாறில் அரசு போக்குவரத்து பணிமனையின் ஓய்வறை இடிந்து விழுந்தது.

இதில் பணிமுடித்து தூங்கிக்கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரசின் அலட்சியமே விபத்துக்கு காரணம் எனக் கூறி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதேபோல் கடந்த மாதம் கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் பொதுமக்கள் 5 பேர் பலியாயினர். நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசுக் கட்டடங்கள் முடிறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகையில் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தங்கும் கட்டடத்தின் ஒரு பகுதி சுவர் இன்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தக் கட்டடம் 1943ஆம் ஆண்டு கட்டப்பட்டது என தெரிய வந்துள்ளது. நேற்று போக்குவரத்து பணிமனை இடிந்து விழுந்து 9 பேர் பலியான அதிர்ச்சி அகல்வதற்குள் தீயணைப்பு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications