தமிழகத்தில் என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ல் தொடக்கம்!
தமிழகத்தில் ஜூலை 17ஆம் தேதி என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜூலை 17ஆம் தேதியிலிருந்து என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும். இந்தக் கலந்தாய்வு இணையம் மூலமாக நடத்தப்படும்.
இக் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 19, 20 ஆகிய நாட்களில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும். இந்த கல்வியாண்டில் என்ஜினியரிங் படிப்பில் சேர 1.47 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.












Click it and Unblock the Notifications