தனி அடையாளங்களை உதறிவிட்டு தமிழர்கள் என்று முன்னிற்க வேண்டும்.. கல்லணையில் சீமான் ஆவேசம்
தனி அடையாளங்களை உதறிவிட்டு தமிழர்கள் என்று முன்னிற்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தஞ்சை: காவிரி விவகாரத்தில் தனி அடையாளங்களை உதறிவிட்டு தமிழர்கள் என்று முன்னிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் இயக்குநர் பாரதிராஜா, சீமான், மணியரசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

வேண்டுமென்றே தீர்க்காமல்
போராட்டக்களத்தில் உரையாற்றிய சீமான் தனி அடையாளங்களை உதறிவிட்டு தமிழர்கள் என்று முன்னிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தீர்க்கக் கூடிய பிரச்சனையை வேண்டும் என்றே தீர்க்காமல் உள்ளனர் என்றும் சீமான் சாடினார்.

இனப்பிரச்சனை ஆக்குகின்றனர்
தமிழ் இனத்துக்கு ஆபத்து வரும்போது தேசிய உணர்வுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் அவர் கூறினார் காவிரி விவகாரத்தை இனப் பிரச்சினை ஆக்குகின்றனர் என்றும் தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டது என்றும் காவிரி ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் சீமான் பேசினார்.

வீதிக்கு வந்து போராடும் நிலையில்
காவிரி நீரை தமிழகத்திற்கு தர விருப்பமில்லாத காரணத்தால் தான் மத்திய அரசு மேலும் இரண்டு வார கால அவகாசம் கேட்டுள்ளது என்றும் சீமான் தெரிவித்தார். எல்லோரும் வீதிக்கு வந்து போராடும் நிலையில் தமிழக அரசு நல்லாட்சி நடைபெறுவதாக கூறுகிறது என்றும் சீமான் கிண்டலடித்தார்.

சீமான் எச்சரிக்கை
காஷ்மீர், நாகலாந்து போன்று தமிழகமும் ஆகப்போகிறது என்றும் சீமான் எச்சரித்தார். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகளும் இளைஞர்களும் பங்கேற்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications