தலித் கிறிஸ்தவர்கள், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி மோடிக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: நரிக்குறவர்களைப் போல தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடிக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தின் விவரம்:
நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கடந்த 17-12-2013 அன்று லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சட்டம் (பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2013-ன் அடிப்படையில் நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மத்திய அமைச்சரவை முடிவுக்கு தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இணைப்பை நீண்ட காலமாக தி.மு.க. கோரிவந்துள்ளது என்று தாங்கள் அறிந்திருக்கலாம்.
உங்களது அமைச்சரவை தீர்மானத்தின் மூலமாக எங்களது கோரிக்கை நிறைவேறியுள்ளது பெரும் திருப்தி அளிக்கிறது. விரைவான அரசியல் சட்டதிருத்தத்தின் மூலமாக சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் அனைத்து சமுதாயத்தினருக்கும் பின்தங்கியுள்ள நரிக்குறவர்கள் பட்டியல் இனத்தவருக்கு அளிக்கப்பட்டுள்ள பயன்களைப் பெற்று முன்னேறுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

நரிக்குறவர் நல வாரியம்
1970-ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு முதல் முறையாக தொகுப்பு வீடுகள் திட்டத்தை அமலாக்கியதுடன் நரிக்குறவர்களுக்கு பல்வேறு விதமான நிதி உதவிகளை அளிப்பதற்காக அவர்களுக்கென்று ஒரு நலவாரியத்தை அமைத்தது என்பதை நினைவு கூர்கிறேன். இது தொடர்பாக, பல லட்சம் ஏழை எளிய மக்கள் பயனடையக்கூடிய இதுபோன்ற மேலும் 2 கோரிக்கைகளை தங்களது கவனத்துக் கொண்டுவரவிரும்புகிறேன்.

தலித் கிறிஸ்துவர்களுக்கு பழங்குடி தகுதி
ஒன்று தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தகுதி வழங்குவதாகும். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போது அவர்கள் அதுவரை அனுபவித்து வந்த உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் இழக்கிறார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதாலும் மதச் சுதந்திரம் அடிப்படை உரிமை என்பதாலும், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியபிறகு பட்டியல் இனத்தவர், பழங்குடியினராகவே கருதப்பட்டு அனைத்து சலுகைகளும் உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. கோரிவந்துள்ளது.

முன் மாதிரிகள்
இதுபோன்ற சலுகைகளை இப்படிப்பட்ட மதமாற்றங்களுக்கு அளித்துள்ள முன்மாதிரிகள் உள்ளன. அதாவது சீக்கிய கிறிஸ்தவர்கள் மற்றும் புத்தமத கிறிஸ்தவர்கள். சொல்லப்போனால் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்துள்ளது. முன்பு ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. இப்பிரச்சினையை 25-10-1996, 7-8-2006, 2-4-2010 ஆகிய தேதிகளில் எழுதப்பட்ட கடிதங்கள் மூலமாக மத்திய அரசுக்கு கொண்டு சென்றுள்ளது.
இதுபோன்ற சலுகைகளை இப்படிப்பட்ட மதமாற்றங்களுக்கு அளித்துள்ள முன்மாதிரிகள் உள்ளன. அதாவது சீக்கிய கிறிஸ்தவர்கள் மற்றும் புத்தமத கிறிஸ்தவர்கள். சொல்லப்போனால் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்துள்ளது. முன்பு ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. இப்பிரச்சினையை 25-10-1996, 7-8-2006, 2-4-2010 ஆகிய தேதிகளில் எழுதப்பட்ட கடிதங்கள் மூலமாக மத்திய அரசுக்கு கொண்டு சென்றுள்ளது.

கடல்சார்பழங்குடிகளாக மீனவர்கள்
மற்றொரு கோரிக்கை மீனவர் சமுதாயத்தை கடல்சார் பழங்குடியினராக பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்குரிய சலுகைகளை வழங்குவதாகும். மீனவர் சமுதாயம் அவர்களது புவியியல் தன்மையின்படியே சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பழங்குடியினர் போலவே உள்ளனர். அவர்களுடைய பிரதான தொழில் மீன் பிடிப்பது என்பதால் வாழ்க்கையின் பெரும் பகுதியை அவர்கள் கடலிலேயே கழித்து வெளி உலகுடன் தொடர்பின்றி உள்ளனர். அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு உரித்தானபடி அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி புத்தொளியைக் காண வழிபிறக்கும்.
எனவே, தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் மீனவர் சமுதாயம் தொடர்பான இந்த 2 கோரிக்கைகளையும் தாங்கள் முறையாகப் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில் மத்திய அரசு விரைவில் சாதகமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மோடிக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications