விடாது துரத்தும் கருப்பு... விஜயபாஸ்கர், சரத்குமார் மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வரும் திங்கள் கிழமை மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதேபோல் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகை ராதிகா ஆகியோருக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவமக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில் கடந்த 7, 8ஆம் தேதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களும் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணமும் சிக்கியது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின. ரொக்கமாக 5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

நெருக்கடி அதிகரிப்பு

நெருக்கடி அதிகரிப்பு

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே விஜயபாஸ்கரின் குவாரியில் மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரின் நெருக்கடி அதிகரித்துள்ளது.

அமைச்சருக்கு எதிர்ப்பு

அமைச்சருக்கு எதிர்ப்பு

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொண்டர்களும் விஜயபாஸ்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி வருகிறார்.

விலக முடியாது

விலக முடியாது

ஆனால் பிடிவாதமாக உள்ள விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இருந்து விலக முடியாது என்பதில் உறுதியாக உள்ளார். அதேநேரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவமக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகை ராதிகா உள்ளிட்டோர் வரும் திங்கள் கிழமை மீண்டும் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

திருப்தியளிக்காததால் முடிவு

திருப்தியளிக்காததால் முடிவு

சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்து இதுவரை நடந்த விசரணை திருப்தியளிக்காததால் மீண்டும் விசாரிக்க வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காகவே வரும் திங்கள் கிழமை மீண்டும் விசாரிக்க வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income tax department going to inquiry again to the Minister Vijayabaskar, sarathkumar, Radhika, Geethalatchmi, Chitlappakkam Rajendiran. IT deparment asked to appear on Monday again.
Please Wait while comments are loading...