கொளுத்தும் வெயில்... சுருண்டு விழுந்து பலியாகும் மக்கள்- முடங்கிய இயல்பு வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் ஒரு சில வாரங்கள் உள்ள நிலையில், சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெப்பம்105 டிகிரியை கடந்து சுட்டெரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெப்பத்தினால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலங்களில் கூட வெயிலின் வீச்சு அதிகமாகவே உள்ளது. கடந்த ஆண்டுகளை விட தமிழகத்தில் வழக்கத்தைவிட வெப்பத்தின் அளவு 5 டிகிரி அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் ஏப்ரல் 19, 20, 21 ஆகிய நாட்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடும் வெயிலால் உடல் நலக் குறைவு ஏற்படும் அபாயம் உள்ளதால் நண்பகல் வேளைகளில் ம‌க்கள் வெளியில் வருவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. எனினும் சுடும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், சாலையில் நடந்து சென்ற முதியவர், கடுமையான வெயில் தாக்கத்தால் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

வெப்பநிலை

வெப்பநிலை

தமிழகத்தில் நேற்று தருமபுரி உள்ளிட்ட 7 இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி சுட்டெரித்தது. தருமபுரியில் 104.18 டிகிரி பாரன்ஹீட், பாளையங்கோட்டை 103.82, சேலம் 103.64, கரூர் பரமத்தி 103.1, மதுரை விமான நிலையம் 102.92, வேலூர் 102.92, திருச்சி 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னையில் வெயில்

சென்னையில் வெயில்

சென்னையில் நேற்று வெப்பம் சற்று குறைவாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் 98.6 டிகிரி பாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 95.18 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியிருந்தது.

அலைமோதும் கூட்டம்

அலைமோதும் கூட்டம்

மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பழவேற் காடு, மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரை சுற்றுலா தலங்களில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தர்ப்பூசணி, முலாம்பழம், இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது.

முதியவர் பலி

முதியவர் பலி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த, காவேரி ரயில் நிலையம் அருகே, நேற்று மதியம், 2:00 மணியவில், 65 வயதுடைய முதியவர் நடந்து சென்றார். சுட்டெரிக்கும் வெயிலால்வருக்கு குடிநீர் கொடுத்து காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், அவர் இறந்து விட்டார். தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார், முதியவர் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

வெப்பத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க

வெப்பத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க

வாகனங் களில் செல்லும் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்கூட வெப்பத் தாக்குதலைத் தடுப்பதற்காக கையுறை அணிந்து செல்வதைக் காண முடிகிறது. வெயில் நேரங்களில் வெளியில் செல்பவர்களில் சிலர் முகத்தை சுற்றி துணியால் மூடிக்கொள்கின்றனர்.

மருத்துவர்கள் அறிவுரை

மருத்துவர்கள் அறிவுரை

வெயிலில் இருந்து தப்பிக்க உடலை மூடிக்கொண்டு செல்வதன் மூலம் உடல் வெப்பம் வெளியேறா‌த நிலை ஏற்பட்டு விடும் என்றும் எனவே இதை தவி‌ர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள். மேலும் கோடை காலத்தில் சில விஷயங்களில் கவனமாக‌ இருப்பதன் மூ‌லமே பாதிப்புகளை தடு‌க்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஏப்ரல் 19, 20, 21 ஆகிய நாட்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் மேகமூட்டம்

சென்னையில் மேகமூட்டம்

சென் னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் 118 டிகிரி வெப்பம்

ஆந்திராவில் 118 டிகிரி வெப்பம்

ஆந்திராவின் 13 மாவட்டங்களிலும் 110 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. விஜயவாடாவில் 118 டிகிரி வெயில் பதிவானது. பகலில் அணல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே செல்ல தயங்குகின்றனர். வெயில் கொடுமைக்கு ஏற்கனவே 100க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த நிலையில் சனிக்கிழமையன்று ஒரே நாளில் 24 பேர் பலியாகி விட்டனர்.

குடிநீர் பற்றாக்குறை

குடிநீர் பற்றாக்குறை

தெலுங்கானா மாநிலத் தில் 103 டிகிரிக்கு வெயில் கொளுத்துகிறது. பல மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வெயில் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+