வஞ்சிரம்.. இறால்.. வவ்வால் மீன்களுடன் கரைதிரும்பிய மீனவர்கள்.. காசிமேட்டில் குவிந்த மக்கள்!
கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர்.
Recommended Video

சென்னை: ஒரு வாரத்திற்கு பின்னர் கடலுக்கு போன மீனவர்கள் வித விதமான மீன்களுடன் கரை திரும்பினர். இதனால் காசிமேடு துறைமுக பகுதியே கூட்டநெரிசலுடன் காணப்பட்டது.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜுன் 14ம்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்களும், பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் இந்த தடைக்காலமான 60 நாட்களுக்கு கடலில் இறங்கி மீன்பிடிக்க செல்லவில்லை.

உற்சாகமாக போன மீனவர்கள்
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. அதனால் அன்று நள்ளிரவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல போகிறோம் என உற்சாகமானார்கள். ஆழ்கடலில் மீன்பிடிக்க தேவையான மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள், கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான டீசல், மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள் என அனைத்தையும் தங்களது படகுகளில் நிரப்பி வைத்துக் கொண்டனர்.

மீன்போக்குவரத்து இல்லை
அத்துடன் கொண்டு வந்த சொற்ப மீன்களையும் வாங்க மீன்வியாபாரிகளும் முன்வரவில்லை. இதனால் விலைவீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மீனவர்களுடன் மீன்பிரியர்களும் சேர்ந்தே கவலையில் உள்ளனர். ஆனால் கடலில் மீன்போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற மீனவர்கள் கூடுதல் மீன்கள் கிடைக்காததால் இரண்டே நாட்களில் வாடிய முகத்துடன் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

வஞ்சிரம், இறால், வவ்வால்
குறைந்த அளவே மீன்களை பிடித்ததால் அதை மீன்வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. விலையும் அதிகரித்தவாறே இருந்தது. இந்நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று மீனவர்கள் கரை திரும்பினார்கள். அப்போது வஞ்சிரம், இறால், வவ்வால், சீலா, என வித விதமான மீன்களை பிடித்து வந்தனர். இதனால் மீன்வியாபாரிகள் ஏராளமானோர் காசிமேடு துறைமுகத்தில் குவிந்தனர்.

போட்டி போட்டு ஏலம்
மீன்வியாபாரம் பல காலம் தடைபட்ட நிலையில் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் எடுத்தனர். குறிப்பாக 15 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் ரூ.5 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. அத்துடன் அதிக விலை காரணமாக மீன்கள் வாங்காமல் இருந்த பொதுமக்களும், திரண்டு வந்தனர். இதனால் காசிமேடு துறைமுகமே மக்கள் தலையாக காணப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications