சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஆரணி! இருமுறை காந்தியடிகள் விஜயம் செய்த சில்க் சிட்டி
ஆரணி: திருவண்ணாமலை மாநகராட்சிக்குள்பட்ட ஆரணி சுதந்திர போராட்ட வேட்கையில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஆரணிக்கு பட்டு நகரம், சில்க் சிட்டி, அரிசி களஞ்சியம் என பல்வேறு பெயர்கள் இருந்தாலும் இந்த ஆரணி சுதந்திர போராட்டத்திலும் வெள்ளையர்களை வெளியேற்றுவதில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
நாட்டின் 78-ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், வீராங்கனைகள், பகுதிகள், தொகுதிகள், குறித்து பிரசுரிப்பதில் ஒன் இந்தியா தளம் பெருமைக் கொள்கிறது.

இன்று நாம் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம் என்றால் அதற்கு காரணம் சுதந்திரம்தான். அது போல் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரத்திற்கு வித்திட்டதும் இதுதான். இதனால்தான் இன்றைய தினம் மத்திய , மாநில அரசுகள் குறித்து விமர்சனங்களை செய்து வருகிறோம். இதே ஆங்கிலேயர் ஆட்சியில் இது போல் பேசினால் முதலில் துப்பாக்கி குண்டுதான் பதில் சொல்லும்.
அந்த வகையில் ஆரணியிலும் சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் சுப்பிரமணிய சாஸ்திரி. இவர் காந்திஜியின் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். அது போல் அவர் ராஜாஜியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறைச் சென்றார். மேலும் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கியதை அடுத்து சுப்பிரமணிய சாஸ்திரி தனது வழக்கறிஞர் தொழிலை கைவிட்டார்.
அதாவது ஆங்கிலேயே நீதிமன்றத்தில் பணியாற்ற மாட்டேன் என கூறிவிட்டார். இப்படிப்பட்ட தியாகிகளை கொண்ட ஆரணிக்கு காந்தியடிகள் இரு முறை வந்திருக்கிறார். 1932 ஆம் ஆண்டும் 1934 ஆம் ஆண்டும் காந்தியடிகள் ஆரணிக்கு வந்திருக்கிறார். இத்தனை பெருமைகளை கொண்டது இந்த ஆரணியாகும். சுதந்திர போராட்டத்தில் ஆரணி கோட்டை மைதானமும் பெரும் பங்குபெற்றுள்ளது.
ஆரணி என்பது ஒரு நகராட்சியாகும். ஆரணியம் என்றால் காடுகளாகும். முன்பு காடுகளாக இருந்த இந்த இடம் மருவி ஆரணி என பெயர் பெற்றது. இந்த நகராட்சி பட்டுப்புடவைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அது போல் நிறைய அரிசி ஆலைகள் உள்ளன.
ஆரணி பட்டுப்புடவை, ஆரணி அரிசி என பல்வேறு பெருமைகள் உள்ளது. இந்த ஆரணியை மாவட்டமாக அறிவிக்கக் கோரி 30 ஆண்டுகளாக கோரிக்கையை மக்கள் வைத்து வருகிறார்கள். இந்த ஆரணி கமண்டல நாகநதி ஆற்றின் கரையோரத்தில் உள்ளது. இங்கு நெசவுத் தொழில், விவசாயம், பட்டுப்புழு வளர்ப்பு, அரிசி ஆலைகள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்டவை பிரதான தொழிலாக உள்ளது.
ஆரணியில் பொன்னி அரிசி நன்றாக இருக்கும். ஆரணி பட்டுச் சேலைக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆரணி என்பது தனி கல்வி மாவட்டமாகும். இந்த கல்வி மாவட்டம் 2019ஆம் ஆண்டு உருவானது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications