அதிமுக ஆதரவு தேர்தல் ஆணையம்.. "குடிகாரக் கட்சி" குமாரசாமி தலைமையில் சுயேச்சைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக நடப்பதாக கூறி அதைக் கண்டித்து இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கியப் புள்ளியாக திகழ்ந்தவர் குமாரசாமி. இவர் குடிகாரர்கள் நல கட்சியின் வேட்பாளர் ஆவார்.

திணிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அதிமுக கிளை செயலாளர் போலவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிமுக நடக்கவில்லை என ஒரு தலைபட்சமாக கூறி வரும், அதிமுக ஆதரவு தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக இவர்கள் கூறினர்.

சென்னை மாநகராட்சி 4வது மண்டல அலுவலகம் முன்பு நடந்தது இப்போராட்டம். இதில் வேட்பாளர்கள் எம்.எல்.ரவி, குடிகாரக் கட்சி குமாரசாமி, ராமச்சந்திரன், வேணுகோபால், மகாராஜன், பொன்ராஜ், துரைவேல், கோபி, ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் காவி வேட்டி அணிந்து வந்திருந்தனர். குடிகாரக் கட்சி குமாரசாமி தோளில் போட்டிருந்த துண்டின் இருபக்கமும் மது புட்டிகள் இடம் பெற்றிருந்தது பார்க்க வித்தியாசமாக இருந்தது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications