For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளத்தில் 3, 4வது அணு உலைகள்... மார்ச் இறுதியில் இந்தியா- ரஷியா கையெழுத்து!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இம்மாத இறுதியில் இந்தியாவும் ரஷியாவும் கையெழுத்திட உள்ளன.

கூடங்குளத்தில் 1, 2வது அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்த அணு உலைகளுக்கு எதிராக ஆண்டுக் கணக்கில் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் போராடி வருகின்றனர்.

India, Russia to sign deal by March-end on new KNPP units

அத்துடன் இந்த போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார், புஷ்பராயன், ஜேசுதாஸ் ஆகியோர் லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.

இந்த நிலையில் கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகள் அமைப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு இந்தியாவும் ரஷியாவும் தீர்வு கண்டுள்ளன. இதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் இரு நாடுகளும் புதிய அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.

English summary
India and Russia are close to resolving differences over the nuclear liability law that has held up agreement on construction of units 3 and 4 of the Kudankulam Nuclear Power Project (KNPP) in Tamil Nadu, and a contract could be signed by March-end, an official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X