தலைகீழாக கொடியேற்றம், குடியரசு தின வாழ்த்து: சுதந்திர தினத்தன்று நடந்த குளறுபடிகள்
சென்னை: டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது குளறுபடிகள் நடந்துள்ளது.
69வது சுதந்திர தினம் சனிக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். மாநில தலைநகர்களில் முதல்வர்கள் கொடியேற்றி உரை நிகழ்த்தினர்.
இந்நிலையில் கொண்டாட்டத்தின்போது நாட்டின் சில பகுதிகளில் குளறுபடிகள் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு,

பஞ்சாப்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கேபினட் அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதிஹா தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியது பலரையும் வியக்க வைத்தது.

அகிலேஷ் யாதவ்
உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைநகர் லக்னோவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது கொடி கம்பத்தின் பாதியில் சிக்கிக் கொண்டது.

குடியரசு தினம்
ஹரியானா மாநில முதல்வர் கத்தார் தேசிய கொடியை ஏற்றிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக குடியரசு தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

மத்திய பிரதேசம்
மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் கௌரி ஷங்கர் ஷெஜ்வார் விதிஷாவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் உரையை வாசித்த பிறகு கிட்டத்தட்ட கீழே விழ பார்த்தார்.

கெஜ்ரிவால்
டெல்லியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது மைதானத்தின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்த மாணவர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிற உடை அணிந்திருந்தனர். சிவப்பு நிற உடை அணிந்திருந்தவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் வடிவில் அமர்ந்திருந்தனர். இதை பார்த்த மக்கள் ட்விட்டரில் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications