8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது… ரணில் பதவியேற்ற அடுத்த நாளே இலங்கை அட்டகாசம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கையில் 51 நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து அந்நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்கள கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை, அவர்கள் வைத்திருந்த படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீனவர்கள் சிறைபிடிப்பு கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும் தங்கள் அட்டூழியத்தை தொடர்ந்திருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முன் வர வேண்டும் என்று கடலோர பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications