For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தை திருமணத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட #StrengthtoSayNo ஹேஷ்டேக்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: குழந்தை திருமணத்தை எதிர்த்து மக்கள் ட்விட்டரில் #StrengthtoSayNo என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்து வருகிறார்கள்.

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ள பராரோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா கலிந்தி(18). பெண் குழந்தை பிறப்பதையே சோகமான விஷயமாக கருதும் கிராமத்தில் பிறந்தவர் ரேகா. அவருக்கு 11 வயதாக இருக்கையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயன்றனர்.

திருமணம் செய்து கொள்ள மறுத்த ரேகாவை அவரது தாய் அடித்து துன்புறுத்தி பட்டினி போட்டுள்ளார். இந்த விவகாரம் மீடியாவுக்கு தெரிய வந்து ரேகா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ரேகாவின் வீரத்தை பாராட்டி அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விருது அவருக்கு வழங்கி கௌரவித்தார். இதையடுத்து ரேகாவின் பெற்றோர் அவரது திருமண ஏற்பாடுகளை நிறுத்தினர்.

இந்நிலையில் பென்குயின் புக்ஸ் நிறுவனம் செய்தி இணையதளமான பெட்டர் இந்தியாவுடன் சேர்ந்து குழந்தை திருமணத்திற்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக #StrengthtoSayNo என்ற ஹேஷ்டேக்குடன் குழந்தை திருமணத்திற்கு எதிராக ட்வீட் செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் 5 திருமண பெண்களில் ஒருவர் 15 வயதுக்குட்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரேகாவின் செயலை நினைவில் வைத்து தான் அந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது.

English summary
A 18-year old Bengali girl has inspired people to create #StrengthtoSayNo hashtag to protest against child marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X