ஒரே கட்சியின் வழக்கில் 2-ஆவது முறையாக அதிரடியாக தீர்ப்பளித்த இந்திரா பானர்ஜி!
ஒரே கட்சியின் வழக்கில் 2-ஆவது முறையாக அதிரடியாக ஒரு தீர்ப்பளித்துள்ளார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
Recommended Video

சென்னை: தகுதி நீக்க வழக்கில் 2-ஆவது முறையாக அதிரடியாக ஒரே தீர்ப்பை அதுவும் ஒரு கட்சிக்கே அளித்துள்ளார் இந்திரா பானர்ஜி.
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களும் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி அவர் மீது நடவடிக்கை கேட்டு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து கொறடா உத்தரவை மீறியதாக 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு
இந்நிலையில் திமுக கொறடா சக்கரபாணி சென்னை ஹைகோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில் கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டது போல் கடந்த ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதி எடப்பாடி அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாறி வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

தீர்ப்பு
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி வந்தது. அப்போது சபாநாயகரின் முடிவே இறுதியானது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்திரா பானர்ஜி தீர்ப்பு
18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்றார். ஆனால் மற்றொரு நீதிபதி சுந்தரோ 18 பேர் தகுதி நீக்கம் செல்லுபடியாகாது என்றார். மாறுபட்ட நீதிபதிகளின் தீர்ப்பால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதிக்கு மாறுகிறது.

அதிரடி தீர்ப்பு
ஓபிஎஸ் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்த இந்திரா பானர்ஜி, இன்றும் சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். ஒரே மாதிரியான ஒரு கட்சியினரின் வழக்கில் 2-ஆவது முறையாக அதிரடி தீர்ப்பளித்துள்ளார் இந்திரா பானர்ஜி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications