Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்லை எனக்கு! பாட்டுப்பாடி ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன இனிகோ இருதயராஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான மறுமலர்ச்சி திரைப்படத்தில் இடம்பெற்ற நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்லை எனக்கு என்ற பாடல் வரிகளை பாடி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லியிருக்கிறர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு பட்டியலின மக்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை சட்டசபையில் வரவேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக இனிகோ இருதயராஜ் கூறியதாவது;

''கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு பட்டியலின மக்களுக்கான சட்ட சலுகைகளை வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ளார் திராவிட திசைக்காட்டி, தளபதி அவர்கள்.

 Inigo Irudayaraj MLA has thanked Chief Minister Stalin by singing the lyrics of the song Nandri solla unakku varthai illa enakku

கடந்த காலங்களில் இந்திய சமூகத்தில் அரங்கேறிய அவலங்கள் காரணமாக,பாதிக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள்.

இந்து மதத்தை பின்பற்றும் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமே பட்டியலின வகுப்பில் சேர்க்க வேண்டும் என 1950 ம் ஆண்டு சட்டத்தின் வாயிலாக
இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களை ஏற்றுக்கொண்ட தலித் மக்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இதனால் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் அதிகாரம் உள்ளிட்ட பல சலுகைகளை மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள் இழந்தனர்.

அப்போது தொடங்கி ஏறக்குறைய 73 ஆண்டுகளாக மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவ மக்களுக்கு பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

சட்ட போராட்டமாக இருந்த இந்த கோரிக்கையை, நம் திராவிட மாடல் ஆட்சியின் தலைவர் தளபதி ,தமிழ்நாடு சட்டமன்றம் மூலம் தனித் தீர்மானமாக கொண்டு வந்து கிறிஸ்துவ மக்களின் அந்த கோரிக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.

இந்தத் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என நம் அன்பு தலைவர் முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு நான் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கடிதம் எழுதி இருந்தேன். அதற்கான பதிலை இந்த மாதம் முடிவதற்குள்ளாகவே தீர்மானமாக நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் நமது முதல்வர் அவர்கள்.

பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் பின் தங்கியுள்ள மதம் மாறிய ஒரே காரணத்திற்காக தலித் கிறிஸ்தவர்களுக்கான சலுகைகள் மறுக்கப்படுவது சமூக சமூகத்திற்கு செய்யும் துரோகம்.

மதம் மாறிய பின்னரும் கூட தலித் கிறிஸ்தவர்கள் , தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் அதே கொடுமைகளை புறக்கணிப்புகளை இந்த சமூகத்தில் அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளில் இருந்து தலித் கிறிஸ்தவர்கள் தப்பவில்லை.

மதம் மாறிய பின்னரும் கூட அவர்களது பொருளாதார நிலையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்று பல அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் 1953ல் வெளியான முதல் அறிக்கை, மண்டல் கமிஷன் அறிக்கை, 1969ல் வெளியான Untouchability Economic and Educational Development Of the Scheduled Castes குழுவின் அறிக்கை, SCs, STs, and Minorities in 1983, 2006ல் வெளியான பிரதம‌ மந்திரியின் உயர்மட்ட குழு அறிக்கை, 2008ல் வெளியான தேசிய சிறுபான்மை நல ஆணைய அறிக்கை மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை போன்றவைகள் அனைத்துமே கிறிஸ்தவ தலித் கிறிஸ்தவர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்துகின்றன.

 Inigo Irudayaraj MLA has thanked Chief Minister Stalin by singing the lyrics of the song Nandri solla unakku varthai illa enakku

ஆனால் 2019 ஆண்டு இந்த சலுகைகள் தேவை இல்லை என்று ஒன்றிய அரசு வழங்க மறுத்துவிட்டது. பிற சமூகத்தினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல சலுகைகள் காரணமாக, இந்து தலித்துகளுக்கும் மதம் மாறிய தலித்துகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகி விட்டது.

இதனால் நமது கிறிஸ்தவ மக்களிடையே நாம் தனிமை படுத்த படுகிறோமோ? என்கிற எண்ணம் அதிகமாகி விட்டது.எஸ் சி /எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்து உதவுகிறது.

பாதிக்க பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வும் அளிக்கிறது. ஆனால் அதே சாதிய பாகுபாட்டில் ,ஏற்ற தாழ்வுகளில் அவதிபடும் தலித் முஸ்லிம்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் சலுகலகள் பல மறுக்கப்பட்டுள்ளன. எஸ்சி தொகுதிகளில் போட்டியிட முடியாத நிலையும் இருக்கிறது.

எனவே இந்த நிலை எல்லாம் மாற, தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியலின வகுப்பில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார் நமது முதலமைச்சர். அதற்காக கிறிஸ்தவ மக்கள் முதல்வருக்கு காலமெல்லாம் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+