சிக்கன் -மட்டன் -மீன்! என்ன வேண்டுமோ கேட்டு வாங்கி சாப்பிடுங்க! இனிகோ இருதயராஜ் வைத்த அசைவ விருந்து!
திருச்சி: திருச்சி கிழக்குத் தொகுதியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு அன்பின் விருந்து படைத்த இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., வாட்ச், புத்தாடை, பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களையும் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் பி.ஹெச்.டி முடித்துள்ளதால் கல்வி சார்ந்த விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவர்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் கொடுத்த அசைவ விருந்து பற்றி முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
''திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவ மாணவியர்க்கும் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்து அவர்களை கௌரவப்படுத்தினேன்.
ஏழ்மையை கல்வியால் வென்றுள்ள அந்த மாணவ மணிகளுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் என் சார்பில் கண்ணப்பா ஹோட்டலில் அன்பின் விருந்து படைத்து அவர்களோடு விருந்துண்டு குழுபுகைப்படம் எடுத்து மகிழ்ந்தேன்.

பின்னர் மாணவ, மாணவிகளோடு கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினேன். அவருடைய மேல் படிப்புக்கு அவர்களுடன் கலந்துரையாடி அவர்களை ஊக்குவித்து விடைபெற்றேன்.
இதில் என்னுடன் திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 கோட்டத் தலைவர் மதிவாணன், மண்டலம் 2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களும் பெற்றோர்களும் உடன் இருந்தனர்.''
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications