நெல்லை அறிவியல் மையத்தில் புதிய அரங்கு... விஞ்ஞானிகளை ஊருவாக்க விரைவில் திறப்பு
நெல்லை: நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்கள் தாங்களே ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் புதிய அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் தொடர்பான மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை மாணவர்களே இயக்கி பார்த்து அறிவியல் ரகசியத்தை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 3டி அரங்கு, டைனோசர் பூங்கா உள்ளிட்டவை அதிகளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் தினமும் அறிவியல் மையத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர். கோடை காலங்களில் அதிக அளவில் இங்கு மக்கள் கூடுகின்றனர். மக்களுக்கு பொழுது போக்கு மையமாகவும் இந்த அறிவியல் பூங்கா இருந்து வருகிறது. இந்த அறிவியல் மையத்தில் புதுவரவாக 'இன்னோவேஷன் ஹப்' எனப்படும் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் அரங்கு விரைவில் திறக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.3 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு கட்டடம் மற்றும் ரூ.2 கோடி மதிப்பில் உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
இந்த கட்டட பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிரூட்டப்பட்ட உள் அரங்கில் இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி, தாவரவியல், உயிரியல் போன்ற பல்வேறு துறைகள் குறித்த ஆராய்ச்சிகளை மாணவர்களே மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு உதவு்ம் புதிய மென்பொருளுடன் கூடிய கணினி மற்றும் இணைய தள வசதிகள் செய்யப்படுகிறது.
மென்பொருளில் ஆராய்ச்சி தொடர்பான மாதிரிகள் மற்றும் ஆலோசனைகள் இடம் பெற்றிருக்கும். இதனை சம்பந்தப்பட்ட மாணவர்களே இயக்கி பார்த்து தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள முடியும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications