Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறிய ஆம்பூர்.. "மடி மீது" தலைவைத்த செந்தாமரை, அதைவிடுங்க.. "அம்மன்" வந்து சொல்லட்டுமே.. போலீஸ் "ஆ"

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: அம்மன் கோயிலை இடிக்க சென்றபோது, திடீரென ஒருவருக்கு அருள் வந்துவிட்டதால், அதிகாரிகள் திகைத்து நின்றனர்.. இதனால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தில் முத்துமாரியம்மன் அம்மன் கோயில் ஒன்று உள்ளது.. இந்த அம்மன் சிலை, 40 வருடங்களுக்கு முன்பாக பூமியில் கிடைத்ததாம்..

அதனால், சிலை கிடைத்த இடத்திலேயே, கோயில் ஒன்றை உருவாக்கி, தொடர்ந்து வழிபட்டு வருகிறார்கள் அந்த பகுதி மக்கள்.. முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ள அந்த இடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

 Innovative incident in ambur and opposition to demolition of amman temple building

ஆம்பூர்: இதனால், அதிர்ந்து போன அந்த பகுதி மக்கள், கோயில் கட்டிடம் இருப்பதால், அதே பகுதியில் சற்று தள்ளியுள்ள இடத்தில் அரசு கட்டிடங்களை கட்டிக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனு தந்தனர்.. ஆனால் அவர்கள் பலமுறை மனு தந்தும்கூட, அதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் பரிசீலிக்கவில்லை என தெரிகிறது. அதனால், திடீரென அந்த பகுதிக்கு வருவாய் துறை அதிகாரிகள் திரண்டு சென்றனர்.. கோயில் கட்டிடத்தில் மின் இணைப்பை துண்டித்துவிட்டனர்.. பிறகு, அந்த கட்டிடத்தை ஜேசிபி மூலம் இடிக்கவும் முயற்சி செய்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு கோயில் கட்டிடத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் இறங்கினர்.. அவர்களுக்கு ஆதரவாக இந்து இயக்க நிர்வாகிகளும் திரண்டு வந்து வாதம் செய்தனர்.. இதையடுத்து, கிராம மக்களுடன், இந்து இயக்க நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, திடீரென வட்டார வளர்ச்சி அலுவலர் கிளம்பி செல்ல முயன்றார்.. திடீரென அவர் கிளம்பியதால், கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.. அதனால் அந்த அதிகாரியின் வாகனத்தை சிறைபிடித்து போராட்டம் மேற்கொண்டனர்.

சாமியாடிய பூசாரி: இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் உமராபாத் காவல் ஆய்வாளர் யுவராணி ஆகியோருக்கும் தகவல் தரப்பட்டது.. அவர்களின் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கோவில் கட்டிடத்தை இடிக்க பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.. ஒருவேளை அதே இடத்தில்தான் அம்மன் கோவில் இருக்க வேண்டும் என்றால் அதை அம்மனே வந்து சொல்லட்டுமே? என்று காவல் ஆய்வாளர் யுவராணி கிராம மக்களிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்ல முயன்றனர்..

 Innovative incident in ambur and opposition to demolition of amman temple building

அருள் பாலித்த அம்மன்: அம்மன் வந்து சொல்லட்டும் என்று சொன்னதுமே, திடீரென கோவில் பூசாரி வெங்கடேசன் சாமியாடினார்.. அவருக்கு அருள் வந்து ஆட ஆரம்பித்தார்.. "கோயில் இருக்கிற இடத்தை விட்டுட்டு, மற்ற இடத்தில் என்ன கட்டிடம் வேணும்னாலும் கட்டிக்கோங்க.. இந்த இடத்தில் தான் நான் குடியிருக்க ஆசைப்படறேன்.. என்னை இங்கிருந்து அப்புறப்படுத்த கூடாது" என்றார். இதைப்பார்த்த போலீசாரும், அதிகாரிகளும் திகைத்து நின்றனர்..

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த நிலையில், தற்காலிகமாக கோவில் கட்டிடத்தை இடிக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். அந்த இடத்தில் கோயில் இருக்க வேண்டுமானால், அதை அம்மனே வந்து சொல்லட்டும் என இன்ஸ்பெக்டர் யுவராணி சொல்லவும், அப்போது திடீரென கோயில் பூசாரி அம்மனாக வந்து பேசியதும், ஆம்பூரில் பரபரப்பை தந்துவருகிறது. இப்படித்தான் 2 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் சேத்பட் செல்லும் சாலை செக்கடிகுப்பம் கிராமத்தில் ஒரு சம்பவம் நடந்தது..

அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடுகளை அகற்ற உத்தரவு வரவும், வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றுவதற்காக நேரடி பார்வை மேற்கொண்டனர். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த மணி என்பவருடைய மனைவி செந்தாமரைக்கு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது பிடிக்கவில்லை.. காரணம், இந்த அரசு நிலத்தில்தான், கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார் இந்த 65 வயது பெண் சாமியார்.. ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் அதிகாரிகளை பார்த்ததுமே, தன்னுடைய வீட்டு முன்பு படுத்துக்கொண்டு மயக்கம் வந்ததை போல நடிக்க துவங்கிவிட்டார் செந்தாமரை..

மடிமீது செந்தாமரை: இதை பார்த்த போலீசார், செந்தாமரையை எழுந்துகொள்ளுமாறு வலியுறுத்தியும், உடல் அசைவின்றி, கண்ணையும் இறுக்கமாக மூடிக்கொண்டு, அவரது கணவனின் மடிமீது தலை வைத்து படுத்துக் கொண்டார்.. இதனால், போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.. ஒரு கட்டத்தில், அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் போலீஸ் அம்முவை அனுப்பி, செந்தாமரையை எழுப்பி விட சொன்னார்கள்.. அந்த பெண் போலீசும், செந்தாமரையை கைப்பிடித்து எழுப்ப முயன்றார்.. உடனே கண்களை திறந்த செந்தாமரை, ஆத்திரம் அடைந்து, பெண் போலீஸின் முகத்தில் பளார் என்று அறைந்துவிட்டார். அதுவும் 2 முறை அம்முவின் கன்னத்தில் அறைந்துவிட்டார்.. அதற்குள் அங்கிருந்த சக போலீசாரும் சுதாரித்து கொண்டு, செந்தாமரையை தடுத்து நிறுத்தினர்.. இந்த சம்பவம் வீடியோவாகவும் வெளியாகி பரபரப்பை தந்த நிலையில், ஆக்கிரமிப்புக்கு போன இன்னொரு இடத்திலும், நடந்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பி விட்டுவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+