தூத்துக்குடிக்கு வந்த ஐஎன்எஸ் குத்தார்... மாணவ, மாணவிகள் வியப்புடன் பார்வை
தூத்துக்குடி: கடற்படையின் சிறப்பை விளக்கும் பொருட்டு கடற்படை வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் குத்தார் போர்கப்பல் தூத்துக்குடிக்கு வந்துள்ளது. இதை மாணவ மாணவியர் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
கடந்த 1971ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே தீவிரமான போர் நடந்தது. அப்போது இந்திய கடற்படை டிசம்பர் மாதம் 4ம் தேதி பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தில் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் நிலை குலைந்தது. அந்த போரில் இந்தியாவின் வெற்றிக்கு கராச்சி தாக்குதல் வழி வகுத்தது.
கராச்சி தாக்குதல் வெற்றி ஆண்டுதோறும கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கடற்படை வார விழாவை முன்னிட்டு விஜயநாராயணம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளம், நெல்லை தகவல் மையம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடற்படை வார விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடிக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் குத்தார் போர்க்கப்பல் வந்துள்ளது.

இக்கப்பலில் தரை வழியாக 80 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை, நவீன ரக துப்பாக்கிகள், மற்றும் பீரங்கி உள்ளிட்ட போர்க்கருவிகள் உள்ளன. மேலும் ஹெலிகாப்டர் நிறுத்தும் வசதியும் உள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் நிற்கும் இந்த கப்பலை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 2 நாள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பார்வையிடும் மாணவ, மாணவிகளுக்கு கப்பலில் உள்ள ஆயுதங்கள் மற்றும் கப்பல் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு மகிழ்ந்தனர். இந்த போர்க்கப்பலை இன்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிடலாம்.
ஐஎன்எஸ் குத்தாரில் 121கடற்படை வீரர்களும், 10 அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போர்கப்பலில் விபத்து காலங்களில் வீரர்கள் தங்களை பாதுகாக்கும் வகையில் 8 சிறிய படகுகளும் உள்ளது. போர்க்கப்பலில் ஏகே 176 ரக துப்பாக்கிகள் மூலம் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கமுடியும். மேலும் இந்த துப்பாக்கிகள் மூலம் நிமிடத்திற்கு 60முதல் 90 ரவுண்டுகள் மூலம் சுட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications