குமரி கடற்கரை கிராமங்களில் உள்ள தாது மணல் குவாரிகளில் இன்று 2–ம் கட்ட ஆய்வு
நாகர்கோவில்: கனிம மணல் முறைகேடு தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் சிறப்புக்குழுவினர் தொடர்ந்து 2-ஆவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் இருந்து தாது மணல் அள்ளப்படுவதில் பெரும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அரசு நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் தாது மணல் அள்ள தடை விதித்ததோடு, அங்கு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
அதன்படி வருவாய் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான அதிகாரிகள் குழு முதற்கட்டமாக நெல்லை மாவட்டத்திலும், பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இம்மாவட்டங்களில் மேலும் ஒரு முறை சூப்பர் செக் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருவாய் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு நெல்லை மாவட்டம் வந்து மணல் குவாரிகளில் ஆய்வு செய்தது.
இப்பணி முடிந்ததும் இக்குழுவினர் வியாழக்கிழமை இரவு குமரி மாவட்டம் வந்தனர். இங்கும் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை மிக நீண்ட கடற்கரை உள்ளது. இதில் எங்கெல்லாம் தாது மணல் உள்ளது, அதில் எந்த இடங்களில் குவாரி மற்றும் மணல் அள்ளப்படுகிறது எனபது பற்றிய விபரங்களை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் இக்குழுவினர் விவாதித்தனர். நேற்று ஆய்வு நடந்த ரஸ்தா காடு, ஆமணக்கன் விளை, கனகப்பபுரம் ஆகிய பகுதிகளிலும் சிறப்புக்குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்பு அப்பகுதி மக்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து 3 குழுக்களாக பிரிந்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
இக்கடற்கரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் நடந்தே சென்று ஆய்வு செய்தனர். பல இடங்களில் மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்த காட்சிகளை ககன் தீப் சிங் பேடி தனது 'டேப்லெட்' கருவியில் பதிவு செய்து கொண்டார். அதன்பின்பு அவர் நாகர்கோவில் திரும்பி மீண்டும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து கீழ்மிடாலம், மேல்மிடாலம் மற்றும் கொல்லன்கோடு ஆகிய பகுதிகளில், அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து செய்தனர்.
இன்று காலையில் மீண்டும் அதே இடங்களில் சூப்பர் செக் ஆய்வு தொடங்கியது. இந்தஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி மணல் குவாரிகளில் ஆய்வு செய்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினோம் என்றார்.
மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள மணல் தேரிகள், தாது மணல் அள்ளப்பட்ட இடங்களில் மீண்டும் ஒரு முறை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு இக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். அதன்பின்பு இங்கு கண்டறியப்பட்ட விபரங்களை அவர்கள் அரசிடம் அறிக்கையாக அளிப்பார்கள். அறிக்கை அளிக்கப்பட்ட பின்னரே அரசு இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications