லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் - வீடியோ
முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரிடம் லஞ்சம் வாங்கியபோது காவல்துறை ஆய்வாளர் பாபு ரவிச்சந்திரனை கையும் களவுமாக லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: காவல்நிலையத்தில் வழக்கை முடித்து வைக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் பாபு ரவிச்சந்திரனை லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத். பொது இடத்தில் தகராறு செய்தனர் என சம்பத் மற்றும் இருவர் மீது வழக்கு உள்ளது.

இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என சம்பத், லத்தேரி காவல் நிலைய ஆய்வாளர் பாபுரவிச்சந்திரனை அணுகியுள்ளார். அதற்கு அவர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியில் சம்பத் 8000 ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதனையடுத்து, அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
Recommended Video

Vellore Inspector Arrested in Bribery Case-Oneindia Tamil
இந்நிலையில், சம்பத் காவல்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரை லஞ்சம் ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications