தமிழக உள்மாவட்டங்களில் இன்று மழை அடிச்சு பெய்யுமாம்.. சென்னை வானிலை மையம் வார்னிங்!
தமிழக உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழக உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகமாக உள்ளது.
சென்னை, கரூர், நெல்லை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் நேற்று வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சம் பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், திருச்சி மற்றும் வேலூரில் 100 டிகிரியும் வெயில் நேற்று பதிவானது.

வங்கக்கடலில் மாற்றம்
அதே நேரத்தில் வங்க கடலில் நிலவி வரும் திடீர் மாற்றங்களால் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. அதாவது, வடதமிழகத்தில் கடந்த வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.

பல இடங்களில் மழை
அதேபோல், வெப்பசலனம் காரணமாகவும் சென்னை உள்பட பல இடங்களில் மழை பெய்தது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

குறைந்த காற்றழுத்தம்
இந்த நிலையில், தெற்கு உள் கர்நாடகாவில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும், உள் கர்நாடகா பகுதிகளில் இருந்து குமரிக்கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications