நல்லா பாருங்கப்பா.. மகள் முகத்தை சந்தோஷமாக காட்டிய டோணி!l
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தனது குழந்தையை, புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்க அனுமதித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி.
ஐ.பி.எல். தொடரில் நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றனர்.

இதற்காக குடும்பத்தோடு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திருந்தார் கேப்டன் டோணி. அப்போது அவரது இரண்டு மாத கைக்குழந்தை ஷீவாவின் முகத்தை அனைவரும் பார்க்கும் வகையில் தனது கையில் குழந்தையைப் பிடித்தபடி இருந்தார் டோணி.
கடந்த சில முறை தனது மகளோடு வெளியே வந்த பொழுதுகளில், மற்றவர்கள் தனது மகளை புகைப்படம் எடுத்து விடாதபடி கவனமாகச் செயல்பட்டார் டோணி. ஆனபோதும், அவரைச் சுற்றி சுற்றி வந்து குழந்தையின் புகைப்படத்தை எடுத்தார்கள் செய்தியாளர்கள்.
இது தான் டோணியின் மகள் புகைப்படம் என இணையத்தில் அந்த புகைப்படம் வைரலாக பரவியது. அதனாலோ என்னவோ இம்முறை மகளின் முகத்தை அனைவரும் பார்க்கும்படி கையில் வைத்திருந்தார் டோணி.
இதனால், விமான நிலையத்தில் டோணியின் குழந்தையை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
இதேபோல், மும்பை சென்றடைந்த பின்னர் குழந்தைகளுக்கான தள்ளு வண்டியில் வைத்து குழந்தை ஷீவாவை டோணி தள்ளி சென்றார். அப்போது அவருக்கு விமான நிலைய அதிகாரிகள் உதவி செய்தனர்.
விமான நிலையத்தில் இருந்த அவரது ரசிகர்கள் பலர் டோணியின் மகளை புகைப்படமும் எடுத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications