ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்.. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி திரிபாதி- சென்னை கமிஷனர் டி.கே.ராஜேந்திரன்
சென்னை: சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீண்டும் பழைய பொறுப்புகளுக்கு இன்று மாலை இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மீண்டும் ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டார். சென்னை மாநகர காவல்துறை ஆணையராக டி.கே.ராஜேந்திரன் திரும்பி வந்துள்ளார்.
கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்ட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜியாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கப் பிரிவு ஏடிபிஜியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
கலெக்டர்கள் இடமாற்றம்
அதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட கலெக்டராக நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை கலெக்டராக கணேஷ், நெல்லை கலெக்டராக கருணாகரன், திருவாரூர் கலெக்டராக மதிவாணன், திண்டுக்கல் கலெக்டராக ஹரிரன், தேனி மாவட்ட கலெக்டராக வெங்கடாச்சலம், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக ஞானசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சத்திய பிரதா சாகு - போக்குவரத்து ஆணையர், டி. கார்த்திகேயன் - தொல்லியல் துறை இயக்குனர். சமயமூர்த்தி - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர், டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர்,வெங்கடாசலம் - தேனி மாவட்ட கலெக்டர், வி.சம்பத் - சேலம் மாவட்ட கலெக்டர், பூஜா குல்கர்னி- மாநில திட்ட இயக்குனர், எஸ். நாகராஜன் - அரசு இ. சேவை மைய இயக்குனர், ராஜேந்திர ரத்தனு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், டி.என்.வெங்கடேஷ்- துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்,டாக்டர் எஸ். ஸ்வர்ணா- டுபிட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர், குமரகுரபரன் - தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications