வெப்பநீரை சரியாக வெளியேற்றாததே கூடங்குளம் விபத்திற்குக் காரணம் – அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கூடங்குளம் விபத்திற்கு காரணம் வெப்ப நீரை சரியாக வெளியேற்றாததுதான் என்று கூறப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் செயல்பட்டுவரும் அணு உலையில் கடந்த மாதம் பராமரிப்பு பணிகள் நடைபெற்றபோது 6 தொழிலாளர்கள் படுகாயமடையக் காரணம் வெப்பநீரை முறையாக வெளியேற்றாததுதான் என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Irregular removing of Heat water – Reason for Kudankulam accident…

மேலும், வெப்பநீர் வால்வு கட்டமைப்பில் எந்த வித குறைபாடும் இல்லை என்றும் அவ்வாணைம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 14 ஆம் தேதி கூடங்குளம் முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது மூன்றுவழி வெப்பநீர் வால்வு ஒன்றில் வெளியான வெப்ப நீர் பட்டு 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அணு உலை நிறுத்தப்பட்டு 24 மணி நேரத்திற்கு பிறகே வெப்பநீர் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் முன்னதாகவே வெப்பநீர் வெளியேற்றப்பட்டதே விபத்து ஏற்பட காரணம் என்று அணு உலையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய நிறுவனத்தின் துணைத்தலைவர் மீகெய்ல் பைகோவ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+