ரவுடி பினு திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கலா? வாகன சோதனையில் போலீஸார்
ரவுடி பினு திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video

திருவள்ளூர்: ரவுடி பினு திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த சூளைமேட்டைச் சேர்ந்தவர் பினு. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் மீது 4-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆட் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து, போதை கடத்தல் இவற்றில் கொடி கட்டி பறந்து வருகிறார்.

இவரையும் இவரது கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி பினுவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் என்பதால் பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட் ஒன்றில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது பிறந்தநாள் கேக்கை ரவுடி பினு வீச்சரிவாளால் வெட்டினார். இதையடுத்து ரவுடிகள் அனைவரும் குடித்துவிட்டு கும்மாளம் போட்டனர். அப்போது ரவுடிகள் கூடுவது குறித்து முன்கூட்டியே தகவலறிந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர்.
அப்போது பினு, கனகு, விக்கி ஆகிய 3 பேர் மட்டும் தப்பி சென்றனர். பினுவுக்கு சேலத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்ததாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர்.
இந்நிலையில் ரவுடி பினுவின் கூட்டாளி முகேஷ் என்பவரை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கைது செய்தனர். ஆனால் பினுவும் அவரது கூட்டாளிகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸார், 3 ரவுடிகளையும் பிடிக்க தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications