நிலம் எப்படி வாங்கினால் லாபம்? ஏக்கர் கணக்கில் 435 சதுர அடியா? சொத்து வாங்குவோர் கவனத்திற்கு
சென்னை: சாதாரண பாமர மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ஒரு சொந்த நிலம் வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாகவே இருக்கிறது.. ஆனால் நிலம் வாங்கச சென்றால், அங்கு பயன்படுத்தப்படும் சென்ட், ஏக்கர், சதுர அடி போன்ற வார்த்தைகள் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.. குறிப்பாக ஒரு சென்ட் நிலம் வாங்கினால் அது லாபகரமானதா அல்லது நஷ்டமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழலாம்.. நில அளவீடுகள் குறித்த தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே நாம் செய்யும் முதலீடு சரியானதா என்பதை உறுதி செய்ய முடியும்.. அவைகளை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சென்ட் என்றால் என்ன? பொதுவாக வீட்டு மனைகளை அளப்பதற்கு சென்ட் என்ற அலகையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.. ஒரு சென்ட் நிலம் என்பது 435.6 சதுர அடிகளைக் கொண்டதாகும்..

1 சென்ட் நிலம் லாபமா
இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் சுமார் 21 அடி நீளமும் 21 அடி அகலமும் கொண்ட ஒரு சதுர வடிவ நிலப்பகுதியை ஒரு சென்ட் என்று நாம் கணக்கில் கொள்ளலாம்.. நகர்ப்புறங்களில் ஒரு சிறிய வீடு கட்டுவதற்கோ அல்லது வணிக ரீதியாக ஒரு சிறிய கடை அமைப்பதற்கோ இந்த ஒரு சென்ட் நிலம் போதுமானதாக இருக்கும்..
அடுத்ததாக ஏக்கர் என்பது விவசாய நிலங்கள் மற்றும் பெரிய பரப்பளவு கொண்ட நிலங்களை அளக்கப் பயன்படும் ஒரு பெரிய அலகாகும்.. நூறு சென்ட் நிலங்கள் ஒன்றாக சேர்ந்தால் அதனை ஒரு ஏக்கர் என்கிறோம்.. கணக்கீட்டு முறையில் சொல்லப் போனால் 43,560 சதுர அடிகள் சேர்ந்ததே ஒரு ஏக்கர் நிலமாகும்..
ஏக்கர் அளவுகோல்
தோட்டம், தோப்பு அல்லது பெரிய தொழிற்சாலைகள் அமைக்கும்போது, இந்த ஏக்கர் கணக்கிலேயே நிலங்கள் வாங்கப்படுகின்றன.. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் நூறு சென்ட் நிலத்திற்குச் சொந்தக்காரர் ஆவார்..
இப்போது ஒரு சென்ட் நிலம் வாங்கினால் லாபம் கிடைக்குமா என்ற கேள்விக்கு வருவோம்.. கண்டிப்பாக ஒரு சென்ட் நிலமாக இருந்தாலும் அது ஒரு சிறந்த முதலீடுதான்.. இன்றைய காலகட்டத்தில் நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.. நீங்கள் வாங்கும் அந்த ஒரு சென்ட் நிலம் ஒரு வளர்ந்து வரும் பகுதியிலோ அல்லது பிரதான சாலையை ஒட்டியோ இருந்தால், அதன் மதிப்பு சில ஆண்டுகளிலேயே நீங்கள் வாங்கிய விலையை விடப் பல மடங்கு உயர்ந்து நிற்கும்.
சொத்து வாங்குவோர் கவனத்திற்கு
பெரிய அளவில் நிலம் வாங்க பணம் இல்லாதவர்கள், சிறுக சிறுகச் சேர்த்து ஒரு சென்ட் நிலத்தை வாங்கி போடுவது பெஸ்ட் சேமிப்பு முறையாகும்..
ஆனால், ஒரு சென்ட் நிலத்தை விற்பனை செய்வது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது.. பெரிய ஏக்கர் கணக்கிலான நிலங்களை வாங்குவதற்கு பெரும் பணக்காரர்கள் மட்டுமே முன்வருவார்கள்.
ஆனால் ஒரு சென்ட் அல்லது 2 சென்ட் நிலங்களை வாங்குவதற்கு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்.. எனவே அவசரத் தேவைக்கு நிலத்தை விற்க நினைக்கும் போது, சிறிய அளவிலான நிலங்கள் உடனே கைமாறும் வசதி கொண்டவை.. நிலம் என்பது அழியாத செல்வம் என்பதால், அது ஒரு சென்ட் நிலமாக இருந்தாலும் சரியான இடத்தில் அமைந்திருந்தால் எதிர்காலத்தில் அது ஒரு பெரும் சொத்தாக மாறும்...!!!












Click it and Unblock the Notifications