அண்ணாமலைக்கு 'நோஸ் கட்'? எப்படி எல்லாம் பேசுனாரு.. இப்போ ஓரமா! அட அதிமுக ரியாக்ஷன் இப்படி இருக்கே!
சென்னை : அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியையே ராஜினாமா செய்வேன் எனப் பேசிய அண்ணாமலையை வரச் சொல்லி, அவரை அருகில் வைத்துக்கொண்டே, அமித் ஷா, நட்டா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதே, கூட்டணி விவகாரத்தில் மாநில தலைவருக்கு உள்ள பவரை காட்டுகிறது என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த 10 மாதங்களாக நிலவி வரும் ஓபிஎஸ் உடனான மோதலில் தொடர்ச்சியாக எடப்பாடியின் கையே ஓங்கி வந்தாலும், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை யார் பக்கமும் நிற்கவில்லை. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமே பொதுச் செயலாளராக அங்கீகரித்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறது ஈபிஎஸ் தரப்பு.
கூட்டணிக்குள் சலசலப்பு : ஓபிஎஸ் ஒருபக்கம் குடைச்சல் என்றால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாள்தோறும் பஞ்சாயத்தைக் கூட்டினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவைத் தொடர்ந்து பாஜக - அதிமுக இடையே விரிசல் அதிகரித்தது. பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவுக்கு தாவியதால் டென்ஷன் ஆன அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தால் மாநில தலைவர் பதவியை விட்டே விலகுவேன் என கர்ஜித்தார்.

அதற்கு அதிமுகவினரும் ரியாக்ஷன் காட்ட, இரு பக்கமும் பற்றி எரிந்தது. பின்னர் சீனியர்கள் தலையிட்டு அமைதிப்படுத்தினர். பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதாக அமித் ஷாவே கூறியும் அண்ணாமலை, அரசியலில் எதுவும் கல்லில் எழுதியதில்லை. நீரில் எழுதிய எழுத்துகள் தான் என பரபரவென பொறிந்தார். இதனால், அண்ணாமலை பாஜக - அதிமுக கூட்டணியை தொடர விட மாட்டாரோ என்ற கேள்வி எழுந்தது.
எடப்பாடி - அண்ணாமலை மோதல் : அதற்குத் தோதாக, சமீபத்தில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டபோது, இதுவரை ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அதிமுகவை சீண்டும் விதமாகவே அண்ணாமலை பேசினார். இதனால், டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி, "முதிர்ந்த அரசியல்வாதியைப் பற்றிக் கேளுங்கள் பதில் சொல்கிறேன். விளம்பரத்துக்காகப் பேசுபவரைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்" என நேரடியாகவே அட்டாக் செய்தார்.
எனவே, அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்துவிடும் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இந்நிலையில் தான் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். அப்போது அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டுள்ளது.
மீட்டிங்கில் ஹைலைட் : இந்தச் சந்திப்பில் ஹைலைட்டான விஷயமே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த மீட்டிங்கில் இருந்ததுதான். தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு எதிராக சீறும் அண்ணாமலையை டெல்லிக்கு வரவழைத்து மீட்டிங்கில் அமர வைத்தார் அமித் ஷா. கர்நாடகா தேர்தல் வேலைகளில் அண்ணாமலை பிஸியாக இருந்தபோதும், எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பில் அண்ணாமலை இருக்க வேண்டும் என ஆர்டர் வந்ததால் தான் புறப்பட்டுச் சென்றாராம் அண்ணாமலை.
அண்ணாமலையை வைத்துக்கொண்டே, அமித் ஷா, அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் பற்றிப் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணியின் நலனுக்காக அதிமுக - பாஜக இரு கட்சியினரும் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும், கூட்டணி சிக்கல்கள் இல்லாமல் செயல்பட, தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் மாற்றி மாறி விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என அமித் ஷா அறிவுறுத்தி இருக்கிறாராம்.
அண்ணாமலை இல்லாமல் : முன்பு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது கூறினார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா தான் பாஜகவின் தலைவர்கள். கூட்டணி தொடர்பாக பேச மேலே பாஸ் இருக்காங்க, கீழே இருப்பவர்களை பற்றி ஏன் கேக்குறீங்க. மாநிலத்தில் தலைவர்களாக இருப்பவர்களை மாறிக்கொண்டே இருப்பார்கள். 2019, 2021 தேர்தல்களைப் போல இப்போதும் மேலிடத்திடம் தான் பேசுவோம் என்றார்.

ஆனால், அண்ணாமலையை அருகில் வைத்துக்கொண்டே கூட்டணி பற்றி அமித் ஷா பேசியிருப்பதன் மூலம், மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் பாஜக மேலிடம் எந்த முடிவும் எடுக்காது என்பதை அதிமுகவினருக்கு தேசிய தலைமை உணர்த்தி இருப்பதாகச் சொல்கிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள்.
அண்ணாமலைக்கு நோஸ் கட்? : அதேசமயம், அதிமுகவினரோ, அண்ணாமலையை வரவழைத்து அமித் ஷா எடப்பாடியிடம் கூட்டணி பற்றிப் பேசியதே அண்ணாமலைக்கு 'நோஸ் கட்'தான் என்கிறார்கள். 'பாஜகவுக்கு தனித்துப் போட்டியிடும் வலிமை உள்ளது' என அண்ணாமலை பேசிய நிலையில், அவரை வைத்துக்கொண்டே அதிமுகவுடன் கூட்டணி பற்றிப் பேசியிருக்கிறார்கள் அமித் ஷாவும் நட்டாவும்.
இதன் மூலம், அண்ணாமலைக்கு பாஜக மேலிடம், அவரது பவரை தெளிவாக உணர்த்திவிட்டது, மேலிட முடிவை மீறி மாநில தலைவர் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாது என்பதை அண்ணாமலை இப்போதாவது உணர்ந்திருப்பார் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர் அதிமுகவினர். ஆக, இந்த விஷயத்தில் எடப்பாடி - அண்ணாமலை சமரசம் ஆனாலும் அவர்களின் ஆதரவாளர்கள் இடையே யுத்தம் தீரவில்லை போலும்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications