கடவுள்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா? கேட்கிறார் கராத்தே தியாகராஜன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
வைரமுத்துவை தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம்- வீடியோ

சென்னை: கடவுள்கள், இறையார்கள், ஊர்சாமிகள், அம்மன்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா? என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தற்காக கவிஞர் வைரமுத்துவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கவிஞர் வைரமுத்துவை கண்டித்து பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

Is H Raja the agent of the gods and saints? Karate Thiayagarajan

கவிஞர் வைரமுத்துவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வைரமுத்துவுக்கான போராட்டங்கள் வலுத்ததையடுத்து தான் கூறிய கருத்து தொடர்பாக வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் அவருக்கு எதிரான கண்டனங்களும் போராட்டங்களும் ஓய்ந்தபாடில்லை.

வைரமுத்து மீது காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறன்றன. இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது கடவுள்கள், இறையார்கள், ஊர்சாமிகள், அம்மன்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karate Thiyagarajan slams H Raja on the goddes Andal issue. Karate Thiyagarajan questiones H Raja is the agent of the gods and saints.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற