கருணாநிதியை விடுங்க.. 1974க்கு பின் மதுக்கடையை திறந்தது யார்? எம்ஜிஆர் - ஜெ.,வை கைக்காட்டிய திருமா
கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் மதுக்கடைகளை கருணாநிதி 1971ல் திறந்து 1974ல் மூடிவிட்டார். அதன்பிறகு மதுக்கடைகளை திறந்தது யார்? அதை யாரும் பேசுவது இல்லையே? டாஸ்மாக் எனும் நிர்வாகத்தை உருவாக்கியது யார்? எம்ஜிஆருக்கு என்ன பங்கு? ஜெயலலிதா என்ன செய்தார்? என்பது பற்றி யாரும் பேசவில்லை என்று உளுந்தூர் பேட்டையில் நடந்த மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பரப்பாக பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை மேடையில் திருமாவளவன் வாசித்து அதன்பிறகு பேசினார். அப்போது திருமாவளவன் கூறியதாவது:

1971ல் கருணாநிதி மதுக்கடைகளை திறந்தார் என்பது உண்மை தான். அதற்கு அவர் என்ன விளக்கம் சொன்னார் என்றால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு இழப்பீடு நிதியை வழங்க வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசிடம் கேட்டார். ஆனால் நிதி தரவில்லை. நிர்வாகம் நடத்த முடியவில்லை. பட்ஜெட்டுக்கான போதிய வரவு செலவு இல்லை. நெருப்பு வட்டத்துக்கு நடுவே கற்புரம் சிக்கிக்கொண்டது போல் என்று விளக்கம் கூறினார். நெருப்பு வளையத்துக்கு நடுவே கற்பூர கட்டி சிக்கி தானாகவே எரியும் என்பதை தான் அவர் விளக்கமாக கூறினார். அதை நான் சரியென்று நியாயப்படுத்த வில்லை.
ஆனால் அன்றைய பொருளாதார சூழல் அடிப்படையில் கருணாநிதி அதை கூறினார். அதன்பிறகு 1974ல் மதுக்கடைகளை மூடினார். அப்போது அவர் தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை தேவை என்று கூறினார். அதை தான் நாம் இன்று வைக்கிறோம். அதன்பிறகு தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறந்தது யார்? அதை யாரும் பேசுவது இல்லையே? டாஸ்மாக் எனும் நிர்வாகத்தை உருவாக்கியது யார்? எம்ஜிஆருக்கு என்ன பங்கு? ஜெயலலிதா என்ன செய்தார்? இன்று ஆட்சி செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின் வந்த பிறகா இந்த மதுக்கடைகளை திறந்தார்? என்ற கேள்வியும் எழுகிறது.
நான் டிபென்ட் செய்து பேசவில்லை. பேசுபவர்களிடம் இருக்கும் சூழ்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பேசக்கூடியவர்கள் யாரும் எம்ஜிஆர் காலத்தில் மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டன.. ஜெயலலிதா காலத்தில் மதுவை அரசே விற்பனை செய்வது சட்டமுறைப்படுத்தப்பட்டது. அது தொடர்கிறது. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அது தொடரும் போது முக ஸ்டாலின் முதல்வராகி உள்ளார். ஸ்டாலின் மதுக்கடைகளை புதிதாக உருவாக்கவில்லை.
ஸ்டாலினை நான் தனியே சந்தித்தபோது என்னிடம் ஸ்டாலின் ஒன்றை சொன்னார். மூடக்கூடாது என்று நினைக்கிறேனா? மூட வேண்டும் என்று தான் நினைக்கிறேன். பதறிப்போய் சொன்னார். இப்படியெல்லாம் ஊடகங்களில் பேசுகிறார்களே? உங்களின் கட்சியை சார்ந்தவர்கள் சொல்கிறார்களே? மூட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு உள்ளது. ஆனால் நிர்வாக சிக்கல்கள் இருக்கின்றன. நான் அதனை மனதில் வைத்து கொள்கிறேன் என்று கூறினார்.
அதன்பிறகு தான் ஒரு கூட்டத்தில் நான் கூறினேன். 2026 சட்டசபை தேர்தல் வருவதற்கு முன்பாகவே மதுக்கடைகளை மூடினால் மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வரும் என்று நான் கூறினேன். அதற்கு என்ன காரணம்? திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது என் நோக்கமல்ல. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை நினைத்து திமுக மதுக்கடைகளைமூட வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்’’ என பேசினார்.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications